மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

கோவை: 5 ஆண்டுகளில் 8 யானைகள் உயிரிழப்பு!

கோவை: 5 ஆண்டுகளில் 8 யானைகள் உயிரிழப்பு!

கோவை பாலக்காடு வழித்தடத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எட்டு யானைகள் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா,கோவை போத்தனூர் பாலக்காடு வழித்தடத்தில் யானைகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர்பாக, தெற்கு ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

சமூக ஆர்வலரின் கேள்விக்கு,பாலக்காடு கோட்ட மூத்த பொறியாளர் ஆனந்தராமன் பதிலளித்துள்ளார். அதில், “கஞ்சிக்கோடு - மதுக்கரை இடையிலான ஏ லைன் மற்றும் பி லைன் ரயில் தண்டவாளங்கள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. இதனால் அடிக்கடி யானை மீது ரயில்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. யானை உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுமார் 1 கி.மீ தூரம், தண்டவாளத்தின் இருபுறமும் சீர் செய்வதற்கு ரூ.4.02கோடி செலவிடப்பட்டுள்ளது. அதனை மேலும் 7.50 கிமீ தூரத்துக்கு அகலப்படுத்துவதற்கு 2021-ல் ரூ.3 கோடியே 10 லட்சம் அளவுக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 15ஆம் தேதி கோவை நவக்கரை அருகே கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஆண் யானை உயிரிழந்தது.

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில்(2015-2021) 561 யானைகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டில் 61 யானைகளும், 2016 ஆம் ஆண்டில் 98 யானைகளும், 2017ஆம் ஆண்டில் 125 யானைகளும், 2018 ஆம் ஆண்டில் 84 யானைகளும் 2019 ஆம் ஆண்டில் 108 யானைகளும், 2020 செப்டம்பர் வரை 85 யானைகளும் என மொத்தம் 561 யானைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 11 ஏப் 2021