மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: க்ரீமி தயிர் சாண்ட்விச்

ரிலாக்ஸ் டைம்: க்ரீமி தயிர் சாண்ட்விச்

சண்டே... நேரங்கழித்து எழுந்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்வோம் என்று நினைத்தாலும் ஒருகட்டத்தில் பசியெடுக்க ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்ட நிலையில் ரிலாக்ஸ் டைமில் சாப்பிட கோடைக்கேற்ற இந்த க்ரீமி தயிர் சாண்ட் விச் உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் கெட்டி தயிரை மெல்லிய துணியில் வடிகட்டி அதிலுள்ள தண்ணீரை எடுத்துவிடவும். பின்னர் தண்ணீர் நீக்கப்பட்ட தயிரை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கவும். பின்னர் அதில் நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் கால் கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட் கால் கப், நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ் கால் கப், நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய் பாதி அளவு சேர்க்கவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வதக்கியெடுத்து ஆறவைத்துக்கொள்ளவும். பின்னர் குளிர்ந்த தயிருடன் நான்கு டீஸ்பூன் மயோனைஸ், சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், வதக்கிய காய்கறிகள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பிரெட்டை எடுத்து அதன்மீது மூன்று டீஸ்பூன் தயிர் - காய்கறிக் கலவையை வைக்கவும். பின்னர் இதன் மேலே இன்னொரு பிரெட்டை வைத்து மூடவும். பின்னர் சரி பாதியாக நறுக்கிப் பரிமாறவும்.

சிறப்பு

கோடைக்காலத்தில் நம்முடைய தினசரி வாழ்க்கையில் தயிரை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா, ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாதபோது இந்த சாண்ட் விச்சை உணவாகவும் உட்கொள்ளலாம்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 11 ஏப் 2021