மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

முகக்கவசம்: மெட்ரோ பயணிகளுக்கு செக்!

முகக்கவசம்: மெட்ரோ பயணிகளுக்கு செக்!

மெட்ரோ ரயில் வளாகத்துக்குள்ளே அல்லது ரயிலின் உள்ளே முகக்கவசம் இல்லாமல் இருக்கும் பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க ஒரே வழி மக்கள் முகக்கவசம் அணிவதுதான் என்று நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அபராதம் விதித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முகக்கவசம் இல்லாமல் பொது இடங்களில் வருவோரிடம் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் இல்லாமல் பயணித்தாலோ அல்லது முகக்கவசம் முறையாக அணியாமல் இருந்தாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

ஒவ்வொரு பயணியும் சரியாக முகக்கவசத்தை அணிந்திருப்பதை உறுதி செய்த பின்னரே மெட்ரோ ரயில் நுழைவு வாயிலுக்குள் செல்ல வேண்டும். சோதனை மையத்தைக் கடந்து ரயிலுக்குள் ஏறியதும் சிலர் முகக்கவசங்களை அகற்றிவிடுகின்றனர் என்றும் சிலர் சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். இன்று முதல் நடைமுறைக்கு வருகிற இந்தக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்த பிறகே, ரயில் நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 11 ஏப் 2021