மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

மருத்துவர்களைத் தாக்கினால் குண்டர் சட்டம்!

மருத்துவர்களைத் தாக்கினால் குண்டர் சட்டம்!

தஞ்சையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, மருத்துவர்களைத் தவறாகப் பேசினாலோ அல்லது தாக்க முயன்றலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அம்மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் ராகவன். இவர்கள் நேற்றிரவு விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்ததால், சிகிச்சைக்காக அவரது நண்பர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது, பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியனுக்கும், காயமடைந்தவர்களின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி பயிற்சி மருத்துவரை நாற்காலியால் தாக்கியுள்ளனர். அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல், தடுக்க வந்தவர்களையும் தாக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர்களை தவறாக பேசினாலோ அல்லது தாக்க முயன்றலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

ஞாயிறு 11 ஏப் 2021