மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

ஒத்துழைப்பு இல்லையென்றால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்!

ஒத்துழைப்பு இல்லையென்றால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்!

கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லையென்றால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் விடுதியை கொரோனா மையமாக மாற்றி, 250 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மையத்தை இன்று(ஏப்ரல் 10) சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளன. விக்டோரியா கொரோனா மையத்தில் லேசான மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இந்தியா கொரோனா பாதிப்பில் 3% தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 பேருக்கு பிரிட்டன் கொரோனாவும், ஒருவருக்கு தென்னாப்பிரிக்க கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவுவது உண்மைதான்.அதை மறுக்க முடியாது.

கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையென்றால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். நோய் தொற்று எந்த வேகத்தில் பரவுகிறது என்பதை மக்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கையில் திருப்தி இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்பட்ட ஆர்வம், 45 வயதுக்கு மேற்பட்டோரிடம் இல்லை. தடுப்பூசி எடுத்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், அது அந்தளவுக்கு தீவிரமாக இருப்பதில்லை.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை முடிந்து இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளும்போது எதிர்ப்பு சக்தி 70% முதல் 80% அதிகரிக்கும். நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 1.2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுப குடிநீர் மற்றும் சித்தா கேர் மையத்தை திரும்ப தொடங்கவுள்ளோம்.

தேனாம்பேட்டை, அண்ணாநகர்,கோடம்பாக்கம்,ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 10 ஏப் 2021