மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

கூடுதல் பயணிகள்: பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

கூடுதல் பயணிகள்: பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

கோவையில், கட்டுப்பாடுகளை தாண்டி பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றினால், அந்த பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் 20 கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த உத்தரவில் மாநகர பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க வேண்டும். நின்று கொண்டு யாரும் பயணம் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில், கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றவா என்பதை சென்னை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது, கட்டுப்பாடுகளை மீறி பேருந்துகளில் பயணிகளை அனுமதித்த ஒட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ரூ.500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயணிகளை ஏற்றும் பேருந்துகள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

சனி 10 ஏப் 2021