மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

தாம்பூலத்தில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு!

தாம்பூலத்தில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு!

மக்களிடையே முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மதுரையில் ஒருவர் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் முகக்கவசத்தை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், மத்திய மாநில அரசுகள் மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் 25 சதவிகித மக்கள் மட்டுமே முறையாக முகக்கவசத்தை அணிகின்றனர், மீதமுள்ளவர்கள் முகக்கவசத்தை அணிவதில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது.

இந்நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் முகக்கவசம் அணிவது குறித்து பாரம்பரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

மதுரை மதிச்சியம் செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சமூக சேவைகளை செய்து வருகிறார். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றும் பொதுமக்களுக்கு தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் முகக்கவசங்களை வழங்கி , அதை அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில் மற்றும் அதனை ஒட்டிய சாலைகளில் முகக்கவசம் அணியாத பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

- வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 10 ஏப் 2021