மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கே அனுமதி!

ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கே அனுமதி!

பழனி முருகன் கோயிலில் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக, இன்று முதல் 20 கொரோனா கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லையென்றால், அதாவது இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தரவில்லையென்றால், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் அடங்கிய உத்தரவில், வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சித்திரை, வைகாசி மாதங்களில்தான் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் திருவிழாக்களுக்கு தடையும், வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என உத்தரவிடப்பட்டதால், பல்வேறு பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் கோயில் வளாகத்திற்குள்ளே நடத்தப்படுகின்றன. தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் இன்று(ஏப்ரல் 10) முதல் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கபடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இரவு 7 மணிக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. 10 வயதிற்குட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

சனி 10 ஏப் 2021