மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

கன்னியாகுமரியில் இ-பாஸ் கட்டாயம்!

கன்னியாகுமரியில் இ-பாஸ் கட்டாயம்!

இன்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்ட அரசாணையை பிறப்பித்துள்ளது. திரையரங்குகள், மால்கள், கேளிக்கை விடுதிகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி, திருமணத்திற்கு 100 பேரும், இறப்புக்கு 50 பேரும் பங்கேற்கலாம். கடைகள் இரவு 11 மணி வரையும், வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கலாம். திருவிழா மற்றும் மதசார்ந்த கூட்டங்களுக்கு தடை, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் உள்ளிட்ட 20 கட்டுப்பாடுகள் இன்று(ஏப்ரல் 10) முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், இன்று முதல் கன்னியாகுமரிக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் , வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா

கடந்த ஆண்டைப் போலவே, இந்தாண்டும் சித்திரை திருவிழா உள்திருவிழாவாகவே நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

சைவ, வைணவ ஒற்றுமையை பேசும் விதமாக மதுரை மீனாட்சி கோயில், அழகர்கோயில் விழாக்களை இணைத்து மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து, சித்திரை மாதம் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் என இத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

கடந்தாண்டு இந்த விழாவின்போது கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால், சித்திரைத் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றன. அவற்றில் பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தாண்டு சித்திரை திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால், சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் உள்திருவிழாவாகவே நடைபெறும். கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மதுரை ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவின் காரணமாக தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயிலின் தேரோட்டம், புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

சனி 10 ஏப் 2021