மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

சபரிமலை: 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

சபரிமலை: 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

சித்திரை மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பக்தர்களுக்கு கோயிலில் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படவில்லை. அதனால், மாதாந்திர பூஜைகள் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐப்பசி மாத பூஜையில்1000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கார்த்திகை மாத பூஜையில் 3 ஆயிரம் பேருக்கும், மகரவிளக்கு பூஜையில் 5 ஆயிரம் பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இந்நிலையில், சித்திரை விஷூ பண்டிகை கால பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார். நடை திறக்கும்போது பக்தர்களுக்கு அனுமதியில்லை. 11 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

ஏற்கனவே இருக்கும்கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 10 ஏப் 2021