மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: வெனிலா பாப்சிகல்

கிச்சன் கீர்த்தனா: வெனிலா பாப்சிகல்

ஒரு காலத்தில் நமக்கு கப் ஐஸ்க்ரீம் என்றால் வெனிலாவைத் தவிர வேறு சுவை தெரியாது. வெனிலா என்ற வாசனைப் பொருளின் பிறப்பிடம் மெக்ஸிகோ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெக்ஸிகோ வாழ் பழங்குடியினர், வெனிலாவைத் தாங்கள் பருகும் பானங்களிலும் இனிப்புகளிலும் கலந்து உண்டார்கள். 1520ஆம் ஆண்டில் மெக்ஸிகோவுக்கு வந்த ஸ்பானிய வீரரான ஹெர்னென் கோர்டிஸ், தனது நாட்டுக்கு வெனிலாவை எடுத்துச் சென்றார். அப்படியாக வெனிலா ஐரோப்பியக் கண்டத்தில் பரவியது. ஐரோப்பியர்கள் தாங்கள் தயாரித்த சாக்லேட் பானங்களில் சுவையும் மணமும் சேர்க்க வெனிலாவைப் பயன்படுத்திக் கொண்டனர். அப்படிப்பட்ட வெனிலாவைப் பயன்படுத்தி நாம் வீட்டிலேயே இந்த வெனிலா பாப்சிகல் செய்து கோடையைக் கொண்டாடலாம்.

என்ன தேவை?

காய்ச்சாத பால் - அரை லிட்டர்

சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - சில துளிகள்

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிப் பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும். அதனுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி இறக்கவும். ஆறியதும் ஃப்ரெஷ் க்ரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை பாப்சிகல் மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

விரும்பினால் பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்க்கலாம். பாலை பிளெண்டரில் அடித்து ஊற்றினால் பாப்சிகல் க்ரீமியாக வரும்.

நேற்றைய ஸ்பெஷல்: நுங்கு பாப்சிகல்

.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 10 ஏப் 2021