மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

திங்கள்வரை சில்லறை வியாபாரம் நடத்தலாம்!

திங்கள்வரை சில்லறை வியாபாரம் நடத்தலாம்!

சென்னை கோயம்பேட்டில் சில்லறை காய்கனி கடைகள் ஏப்ரல் 12ஆம் தேதி வரை வழக்கம்போல் செயல்படலாம் என வணிக வளாக முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபாரத்துக்கு தடை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை முதல் சில்லறை வணிக வியாபாரிகள் சிஎம்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

சில்லறை வியாபாரத்துக்கு தடை விதித்தால் , தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால், சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் வணிக வளாக முதன்மை அதிகாரி கோவிந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து அவர் கூறுகையில், ”நாளை வழக்கம்போல் சில்லறை வியாபாரிகள் கடைகளை திறக்கலாம். திங்கள்(ஏப்ரல் 12) கிழமை வரை வியாபாரம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றைக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட சிறிய காய்கறி கடைகளும், 850க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் இருக்கின்றன. இங்கு 2,000க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 9 ஏப் 2021