மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

கொரோனா: சென்னையில் 10 மடங்கு அதிகரிப்பு!

கொரோனா: சென்னையில் 10 மடங்கு அதிகரிப்பு!

சென்னையில் கொரோனா தொற்று ஒரு மாதத்தில் 10 மடங்கு அதிகரித்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 15 மண்டலங்களின் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று(ஏப்ரல் 9) ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ” நாளை முதல் சென்னையில் வீடு வீடாக சென்று உடல்வெப்பநிலை உள்ளிட்ட சோதனைகளை செய்யும் பணியில் 6 ஆயிரம் பேர் ஈடுபடுவார்கள். ஒருவர் தலா 250 வீடுகள் வீதம் ஆய்வு மேற்கொள்வர். சென்னையில் 3 மாதங்களில் 1.15 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தெரு வாரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கணக்கெடுக்கப்படவுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று ஒரு மாதத்தில் பத்து மடங்காக அதிகரித்துள்ளது. அதனால், மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரண்டு தெருக்களுக்கு ஒரு தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதை போல இந்த ஆண்டும் செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

தெருவில் 3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாட்டு பகுதி என ஸ்டிக்கரும், 6 பேர் இருந்தால் பேனர் வைக்கப்படும். அதுவே 10 பேருக்கு மேல் தொற்று இருந்தால் அப்பகுதியில் வருகை பதிவேடு உடன் போலீஸ் கண்காணிப்பு இருக்கும்.

பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறியும் போது உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும், பரவலையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை வேண்டும் என்பதால் அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வெள்ளி 9 ஏப் 2021