மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

குவாரிக்கு தடை கோரி வழக்கு: ஆட்சியருக்கு உத்தரவு!

குவாரிக்கு தடை கோரி வழக்கு: ஆட்சியருக்கு உத்தரவு!

குவாரி நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய மனுவில், சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை நடைபெறுகிறதா? என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 3 நாட்களுக்குள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள சொடையூர் கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம். சொடையூர் கண்மாய் தண்ணீர் மூலம்தான் இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது.

ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை ஜெயப்பிரகாஷ் என்பவர் மதுரையைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரது பெயரில் குவாரி உரிமம் பெற்று சொடையூர் கண்மாய் பகுதியில் கிராவல் மண் எடுத்து வருகிறார். இதனால் இப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மேலும் சொடையூர் கண்மாய் பாதிப்படைவதால், இப்பகுதியில் நடைபெறும் விவசாயமும் பாதிப்படைய கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், குவாரி நடைபெறும் இடத்தை வழக்கறிஞர் ஆணையம் நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். குவாரி நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதமாக குவாரி உரிமம் வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 9) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கனிமவள கொள்ளையை பொருத்தவரை திருட்டு நடைபெற்ற பின்பு அபராதம் விதிப்பதா? இல்லை திருட்டு நடைபெறாமல் பார்த்து கொள்வதா என கேள்வி எழுப்பினர்.

குவாரி நடத்துவதற்கான 21 விதிமுறைகளும், அனுமதி வழங்குவதற்கான 4 விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு உள்ளதா?, என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 3 நாட்களுக்குள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

வினிதா

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வெள்ளி 9 ஏப் 2021