மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

கட்டுப்பாடுகள்: திருமண மண்டப உரிமையாளர்கள் எதிர்ப்பு!

கட்டுப்பாடுகள்: திருமண மண்டப உரிமையாளர்கள் எதிர்ப்பு!

திருமண மண்டபங்களில் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதியளிக்க வேண்டும் என திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை முதல் 20 கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இந்த கட்டுப்பாடுகளால் பாதிப்படையும் அமைப்புகள் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி போராட்டமும், கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சியில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஊரடங்கின்போதும் திருமண நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பெரும்பாலானோர் எளிமையான முறையில் கோயில்களில், வீடுகளில் திருமணத்தை முடித்து கொண்டனர். தற்போதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மக்கள் யாரும் திருமண மண்டபத்தை நாட மாட்டார்கள். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிப்படையும் என திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜான் அமல்ராஜ் கூறுகையில், ”டாஸ்மாக் உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காதபோது சுப நிகழ்ச்சியான திருமண மண்டபத்திற்கு மட்டும் கட்டுப்பாடுகள் என்பது சரியல்ல. திரையரங்குகள், கேளிகை விடுதிகள், மால்கள் 50% பேருடன் இயங்க அனுமதி அளிக்கும்போது, திருமணத்திற்கு மட்டும் 100 பேர் என்பது நியாயமான விதியாக இல்லை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு பரப்பளவில் இருப்பதால், அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

திருமண மண்டபங்களை கட்டுவதற்காக 95% கடன் பெற்று, அதற்காக மாதாமாதம் வட்டி செலுத்தி வருகிறோம். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். சொத்துவரி, குடிநீர் வரி என அனைத்தையும் செலுத்தி வருகிறோம். இந்த சூழ்நிலையில் தடை விதித்தால் எப்படி சூழ்நிலையை சமாளிப்பது. அதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் திருமண மண்டபங்கள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கக் கோரி தலைமை செயலாளரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 9 ஏப் 2021