மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

மாஸ்க் இல்லாமல் வந்தால் அபராதம்!

மாஸ்க் இல்லாமல் வந்தால் அபராதம்!

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்பு கொரோனா அச்சத்தால் முகக்கசவத்தை அணிந்த மக்கள், தற்போது அலட்சியத்தால் அந்த பழக்கத்தை கைவிட்டு வருகின்றனர். ஆனால், சில இடங்களில் அபராதம் விதிக்கப்படுவதை தொடர்ந்து முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கான அபராத நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200ம், பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும்.

வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிடில் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 5000மும், 2 முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறும் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா விதிமுறைகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும், அதிகபட்ச இலக்காக ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில், ஒருநாளில் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு மதுரையில் ரூ.200ம், திருப்பத்தூரில் ரூ.500ம், கோத்தகிரியில் ரூ.200ம், திருச்சியில் ரூ.100ம், கோவையில் ரூ 500ம், நீலகிரியில் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானாவில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று புதுச்சேரியில் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 9 ஏப் 2021