மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

கைப்பையை மீட்டு தாருங்கள்!

கைப்பையை மீட்டு தாருங்கள்!

பேருந்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட தனது பேக்கை மீட்டு தருமாறு அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் முகநூலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அதிகாலை 2.35 மணியளவில் மதுரையில் இருந்து குமுளிக்கு TN 57 N 2491 என்ற பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் ரமேஷ்குமார் என்பவர் நடத்துனராக பணிபுரிந்துள்ளார். அப்போது, மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்வதற்கு 10 நபர்கள் கொண்ட குடும்ப உறவினர்கள் பேருந்தில் ஏறினார்கள். இவர்கள் கொண்டு வந்த பேக்குகளை நடத்துனர் இருக்கை அருகே வைத்திருந்தனர்.

உசிலம்பட்டி பேருந்து நிலையம் வந்தவுடன் அவர்கள் இறங்கும் போது அவர்களின் பேக்குகளை எடுக்கும்போது, அருகில் இருந்த நடத்துனரின் கை பேக்கையும் எடுத்து சென்றுவிட்டனர். அதில், அவர் தினமும் பயன்படுத்தும் மாத்திரைகள் , டூவீலர் சாவி, மற்றும் ஒரு நடத்துனருக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள் இருக்கின்றன.

இந்நிலையில், இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில், பேருந்தில் தவறவிட்ட பேக்கை மீட்டு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ”உசிலம்பட்டியை சார்ந்த நண்பர்கள் இந்த விசயத்தில் எனக்கு உதவி செய்து எனது பேக் (கை பை) கிடைக்க உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி தன்னுடைய பணி விவரத்தையும் தெரிவித்துள்ளார்.

விவரம்

பெயர் : S.ரமேஷ்குமார் நடத்துனர், பணி எண் : 65799 லோயர் கேம்ப் கிளை தேனி மாவட்டம்.

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 9 ஏப் 2021