மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

சென்னையில் கூடுதலாக பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் கூடுதலாக பேருந்துகள் இயக்கம்!

பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை முதல் சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்ற பேருந்துகளில், பொதுவாக 44 இருக்கை வசதிகளும், 25 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்யும் அளவு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யக் கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள நாளை(ஏப்ரல் 10) முதல் சென்னையில் 300 முதல் 400 பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்படும். பொதுமக்கள் அதிகம் பயணம் செய்கின்ற, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதாவது, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 9 ஏப் 2021