dகொரோனா : தஞ்சை கோயில் தேரோட்டம் ரத்து!

public

தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோயிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. சித்திரை திருவிழா மிக விமரிசையாக 18 நாட்கள் கொண்டாடப்படும். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று(ஏப்ரல் 9) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக கொடியேற்ற விழாவில் குறைந்த அளவிலேயே பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், கொடியேற்ற விழாவை ஒட்டி நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இந்த சித்திரை திருவிழாவின் 18 நாட்களிலும் காலையில் திருமுறை விண்ணப்பம், மாலையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கோயில் திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளதால், சித்திரை திருவிழா நடைபெறும் 18 நாட்களிலும் நிகழ்ச்சிகள் ஊர்வலம் என அனைத்தும் கோயில் வளாகத்திற்குள்ளே நடைபெறவிருக்கிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. கொரோனாவின் காரணமாக அந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் தொடர்ந்து இரண்டாவது முறையும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்பிரபலமான திருவிழாக்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவும் ஒன்று. பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் திருவிழா நடத்தப்படவில்லை.

இந்தாண்டு திருவிழாவில் ஏப்ரல் 12 ஆம் தேதி தேரோட்டம் நடத்த அறிவிக்கப்பட்டு, உள்ளூர் விடுமுறையும். தேர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *