மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

சில்லறை வியாபாரிகள் போராட்டம்!

சில்லறை வியாபாரிகள் போராட்டம்!

நாளை முதல் கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சிஎம்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறு, குறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை தடுக்கும் வகையில் தமிழக அரசு நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மால்கள் போன்றவற்றில் 50% பேருக்கு அனுமதி, பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது. திருவிழா மற்றும் மதசார்ந்த கூட்டங்களுக்கு தடை, கோயம்பேடு சந்தையில் சில்லறை வணிகத்துக்கு தடை என அறிவிக்கப்பட்டது.

கோயம்பேடு சந்தையில் 1,800 க்கும் மேற்பட்ட சிறுகடைகள் உள்ளன. சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் என அனைவரும் கோயம்பேடு வணிக வளாகத்தை முற்றுகையிட்டு இன்று(ஏப்ரல் 9) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

”கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதனால் ஏறத்தாழ 8 மாதங்கள் வரை வருவாய் இல்லாமல் வணிகர்கள் தவித்து வந்தனர். தற்போதுதான், படிப்படியாக கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டு வியாபாரத்தை தொடங்கியுள்ளோம். இந்த நிலையில் மீண்டும் சில்லறை வியாபாரத்துக்கு தடை விதித்தால், நாங்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது. வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், தொடர்ந்து கடைகளை செயல்பட அனுமதிக்க வேண்டும்” என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சில்லறை வணிகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுழற்சி முறையில் வணிகம் நடைபெற அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறி சிஎம்டிஏ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறுகையில், " கடந்த முறை கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு வியாபாரிகளே. கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்ட போது, சிறுவியாபாரிகளுக்கு கடைகளே ஒதுக்கப்படவில்லை. பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிற வேளையில், மீண்டும் தடை விதிக்கப்படுவது இடி விழுந்ததை போல் உள்ளது. 50 விழுக்காடு கடைகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் ” என கூறினார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 9 ஏப் 2021