மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: உருளைக்கிழங்கு சூப்!

ரிலாக்ஸ் டைம்: உருளைக்கிழங்கு சூப்!

உருளைக்கிழங்கில் வறுவல், சிப்ஸ், போண்டா என எண்ணெயில் பொரித்த பலகாரங்களைக் கோடையில் தவிர்த்து, வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான உருளைக்கிழங்கு சூப் செய்தும் பருகலாம்.

எப்படிச் செய்வது?

அரை கிலோ உருளைக்கிழங்கு, இரண்டு பெரிய வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு வேகவைக்கவும். வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும். இதனிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு டேபிள்ஸ்பூன் மைதா மாவு, நான்கு டேபிள்ஸ்பூன் பால், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்து, அதை அடுப்பில் உள்ள உருளைக்கிழங்கு கலவையில் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து கெட்டியான பிறகு கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சிறப்பு

அனைத்து வயதினருக்கும் ஏற்றது, இதில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக சக்தியையும் புத்துணர்ச்சியையும் தரும்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 9 ஏப் 2021