மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

திருவிழாவுக்கு தடை: நாடக கலைஞர்கள் போராட்டத்துக்கு அழைப்பு!

திருவிழாவுக்கு தடை: நாடக கலைஞர்கள் போராட்டத்துக்கு அழைப்பு!

தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி போராட்டம் நடத்துவதற்கு ஜெயம் நாடக மன்றம், நாடக கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுபபாடுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதில், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

சித்திரை, வைகாசி மாதங்களில்தான் பெரும்பாலான இடங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்தப்படும். இதில் கலைநிகழ்ச்சிக்காக நாடக கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். ஆண்டில் இந்த மாதங்கள் மட்டுமே இவர்களுக்கு வருவாய் ஈட்டி தரும் மாதங்களாக இருக்கின்றன.

கொரோனா காரணமாக கடந்தாண்டும் இதே மாதங்களில்தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால், நாடக கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போதும் இதே சீசனில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயம் நாடக மன்றத்தின் உரிமையாளர் கேசவன் ஒரு அழைப்பு விடுத்துள்ளார். அதில், “ இவ்வளவு நாட்களாக அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டங்கள் நடத்தும்போது கொரோனா பரவல் இல்லையா, கூட்டம் கூட்டமாக வாக்கு சேகரிக்க சென்றபோது கொரோனா இல்லையா, அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், நாடக கலைஞர்களுக்கு ஒரு சட்டமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இத்தனை நாள் அறிவிக்காத கட்டுப்பாடுகளை இப்போது ஏன் அறிவிக்க வேண்டும். அதனால், நாடக கலைஞர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் இருக்க வேண்டும். முடிந்தளவு கடுமையான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும். நாடக நடிகர்களும், நாடக மன்றத்தின் உரிமையாளர்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையென்றால், நம்முடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

யார் வந்தாலும், வரவில்லையென்றாலும் ஜெயம் நாடகம் மன்றம் கண்டிப்பாக இந்த போராட்டத்தை முன்னெடுக்கும். நமக்கு பின்வருகிற நடிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த போராட்டத்தை நடத்த வேண்டும். ஏற்கனவே இருக்கிற ஆர்டர்களை ரத்து செய்வதற்கு முன்பாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து முதல்வரை சந்திப்போம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து இதற்கு தீர்வு காண்போம். அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு வருவாய் தரும் துறைகளில் நாடக கலைஞர்கள் அமைப்புகள் இல்லாததால், நமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நமக்கு வருவாய் கிடைக்கும் இந்த மூன்று மாதங்களும் வீட்டில் இருந்துவிட்டால், நம்முடைய வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது. அதனால், போராட்டத்தின் தேதி அறிவித்தால், இந்த கோரிக்கைகளுடன் போராட்ட களத்தில் இறங்க தயாராக இருப்பதாக சில கலைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதது ஏன் ?. மற்ற தொழில்களுக்கும், கோயில்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் நேர கட்டுப்பாட்டை விதிக்காதது ஏன், என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 9 ஏப் 2021