மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

கொரோனா: எட்டு மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை!

கொரோனா: எட்டு மாநில முதல்வர்களுடன்  பிரதமர் இன்று ஆலோசனை!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இந்த நிலையில், எட்டு மாநில முதல்வர்களுடன் இன்று (ஏப்ரல் 8) பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில், தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

உலக அளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் ‘வோர்ல்டோமீட்டர்ஸ்’ (Worldometers) இணையதள விவரங்களின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 630 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் மொத்த பாதிப்பு 30 லட்சத்தைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் ஒரு கோடியே 28 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இருப்பினும், மீண்டும் முழு ஊரடங்கு இருக்காது என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இன்று எட்டு மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்தியப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் ஏற்படும் கொரோனா பாதிப்பின் 80 சதவிகிதம் மேற்கண்ட மாநிலங்களில்தான் அதிகமாக உள்ளதால், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த இந்த ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி ஏழு கோடி பேருக்கு மேல் போடப்பட்டுள்ள நிலையில், மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 8 ஏப் 2021