மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

லஞ்ச ஒழிப்பு துறை எப்படி செயல்படுகிறது?

லஞ்ச ஒழிப்பு துறை எப்படி செயல்படுகிறது?

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை எப்படி செயல்படுகிறது? அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்படுகிறதா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 70 ஆயிரத்து 60 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர் கோபால கிருஷ்ணனை செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

லஞ்சம் பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், இந்த இடமாற்றம் சட்ட விதிகளுக்கு புறம்பானது. அதனால், இடமாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என 'கருப்பு எழுத்து கழகம்' என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(ஏப்ரல் 8) தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது, ஊழல் என்னும் புற்றுநோய் நம்மை கொன்று கொண்டிருக்கிறது என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள் ஊழலால் நில அபகரிப்பு, நீர் நிலைகள் மாயம் போன்றவை நடப்பதாக சுட்டிக் காட்டினர்.

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை எவ்வாறு செயல்படுகிறது? அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்படுகிறதா? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 8 ஏப் 2021