மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

திருச்செந்தூர் கோயில்: உயிரிழப்பைத் தடுக்க சுற்றுசுவர்!

திருச்செந்தூர் கோயில்: உயிரிழப்பைத் தடுக்க சுற்றுசுவர்!

திருச்செந்தூர் கோயில் அருகே உள்ள கடலில் மூழ்கி பக்தர்கள் உயிரிழப்பதைத் தடுக்க 19.80 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கபட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலைய துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி தொடர்ந்த வழக்கில், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க, தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் திட்டம் ஒன்றை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் இந்த வழக்கு விசாரணை இன்று(ஏப்ரல் 8) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பு நடந்தது. அப்போது, தமிழக அரசு, இந்து அறநிலைய துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், திருச்செந்தூர் கோயிலில் கடலில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பதைத் தடுக்க சுமார் ரூ.19.80 கோடி மதிப்பில் 520 மீட்டர் அளவில் சுற்று சுவர் அமைக்கப்படவுள்ளது. ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில், நகராட்சி ஊழியர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கும் வகையில் கிரில் கதவுகள் எழுப்பப்பட்டுள்ளன. கன்னியாகுமரி கோயில் அருகே உள்ள கடலை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று தமிழகத்திலுள்ள முக்கிய கோயில் குளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் ஆலோசனை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 8 ஏப் 2021