மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

கொரோனா: ஒரு கிராமத்திற்கே தடை!

கொரோனா: ஒரு கிராமத்திற்கே தடை!

கொரோனா பரவலால் திண்டுக்கல் அருகே ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு, மொத்தமாக 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அசோக்நகர், நாராயணன் நகர் ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள தெருக்களை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அதுபோன்று நிலக்கோட்டை அருகே ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இங்கிருந்து யாரும் வெளியே வர முடியாது என்பதால், கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அவர்கள் இடங்களிலேயே வந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று விதித்துள்ளது குறிப்பிடதக்கது.

மதுரை

மதுரையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்,

மதுரை மாநகராட்சியில் உள்ள 20 வார்டுகளில் பரிசோதனை முகாம் அதிகரிக்க திட்டமிடப்பட்டது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முன்பு பின்பற்றப்பட்டதைப் போல், அப்பகுதியை அடைத்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, 18 இடங்களை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும் என்றும், மாநகராட்சியின் 31 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 8 ஏப் 2021