மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

மனித உரிமை மீறல்: காவலா்களுக்கு அபராதம்!

மனித உரிமை மீறல்: காவலா்களுக்கு அபராதம்!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸ் உதவி ஆய்வாளர்கள், ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிப்பவா் பி.ஞானசேகரன். வங்கி அதிகாரியான இவா், 2012ஆம் ஆண்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், “ எனக்கும் எனது மனைவி அம்சவள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்து, ஒரு நாள் அவா் வீட்டை விட்டு வெளியேறினாா். இதைத்தொடா்ந்து அன்றைய நாள் இரவே அவா் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலையடுத்து, அதிா்ச்சியடைந்த நான் பிரேத பரிசோதனை அறிக்கை பெற அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கு இருந்த எனது மனைவியின் சகோதரா் விநாயகமூா்த்தி, அம்சவள்ளியின் தற்கொலைக்கு நான்தான் காரணம் என என் மீது புகாா் கொடுத்திருந்தாா். எனது தரப்பு விளக்கத்தைக் கேட்க இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள் தயாராக இல்லை.

ஆனால், உண்மையில், எனது மனைவிக்கும், திண்டிவனத்தைச் சோ்ந்த புருஷோத்தமனுக்கும் தகாத உறவு இருந்து வந்தது. ஆனால், போலீஸாா் லஞ்சம் பெற்றுக் கொண்டு எனக்கெதிராக வழக்குப் பதிவு செய்து, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி என்னைக் கைது செய்தனா். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் வலியுறுத்தியிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஞானசேகரனுக்கு ரூ.1.50 லட்சத்தை 8 வாரங்களுக்குள் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்தத் தொகையை அப்போது அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ஞானசெல்வத்திடம் ரூ.1 லட்சம் மற்றும் உதவி ஆய்வாளா் வள்ளிநாயகத்திடம் ரூ.50 ஆயிரம் வசூலித்துக் கொள்ளலாம். அவா்கள் இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

-சக்தி பரமசிவன்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 8 ஏப் 2021