மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ஆண்களை குறிவைக்கும் கொரோனா!

ஆண்களை குறிவைக்கும் கொரோனா!

தமிழகத்தில் கொரோனாவால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வந்த 24 ஆயிரத்து 684 விமானங்களில் பயணம் செய்த 23 லட்சத்து 77 ஆயிரத்து 375 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 425 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் அதிகமாக 30-39 வயதினர் 20.14 சதவீதமும், 40-49 வயதினர் 18.37 சதவீதமும், 50- 59 வயதினர் 17.97 சதவீதமும், 20-29 வயதினர் 17.93 சதவீதமும், 60-69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தப்பட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3,61,122 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஆண்களின் எண்ணிக்கை 5,49,952 ஆக இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று புதியதாக 3,986 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 2,391 பேர், பெண்கள் 1,595 பேர்.

இதன்மூலம், கொரோனா தொற்றுக்கு பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

சோதனை அதிகரிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, மீண்டும் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் 1459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் சில நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அமைத்து, மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். நேற்று மட்டும் 200 வார்டுகளில் சுமார் 230 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காய்ச்சல் முகாம்கள் மூலம் அறிகுறி உள்ளவர்கள் தொற்று ஏற்படுவதற்கு முன்பே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டால், தொற்று பரவுவதையும், உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 8 ஏப் 2021