மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

பேருந்தும் லாரியும் மோதியதில் மூவர் பலி!

பேருந்தும் லாரியும் மோதியதில் மூவர் பலி!

கடலூர் அருகே அரசு பேருந்தும், மீன் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 20 பேர் படுகாயமடைந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்றிரவு (ஏப்ரல் 7) அரசுப் போக்குவரத்துக் கழக சொகுசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அரசு பேருந்து நள்ளிரவு 2 மணியளவில், ஆலப்பாக்கம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த மீன் லாரி எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மீது மோதியது.

பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த 20 பயணிகளில் 16 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த மூவரும், பேருந்தை ஓட்டி வந்த திருக்கோவிலூர் அருகே திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் ( 42), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அன்பரசன் (34), மற்றும் வைரவன் (20) என்பது தெரிய வந்துள்ளது.

வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

அதுபோன்று நேற்று சீர்காழி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அசோகன், வட்டார கல்வி அலுவலர் பாபு ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேகமாக காரை ஓட்டி வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வியாழன் 8 ஏப் 2021