மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: தயிர் மக்ரோனி!

ரிலாக்ஸ் டைம்: தயிர் மக்ரோனி!

கோடைக்காலத்தில் விடுப்பு நாள்களில் வெரைட்டியான உணவைத் தேடும் குட்டீஸ்களைத் தயிர் மட்டும் சாப்பிட வைப்பதென்பது அத்தனை எளிதான காரியமில்லை. அதனால், குழந்தைகளுக்கு தயிர் மட்டுமே சாப்பிடக் கொடுக்காமல் அவர்களுக்குப் பிடித்த விதத்தில் இந்த தயிர் மக்ரோனி செய்து கொடுக்கலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் மக்ரோனியை மூன்று கப் கொதிக்கும் நீரில் சேர்த்து வேக வைக்கவும். மக்ரோனி நன்றாக வெந்த பின்னர் அவற்றை வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி மறுபடியும் தண்ணீரை நன்றாக வடித்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இத்துடன் ஒரு கப் தயிர், தேவையான அளவு உப்பு, லேசாக வேகவைத்த ஸ்வீட்கார்ன் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

கால்சியத்தின் சுரங்கமான தயிரில் குடலுக்கு நன்மை விளைவிக்கும் புரோபயாட்டிக் பாக்டீரியாக்கள் அபரிமிதமாக இருக்கின்றன. கோடைக்கேற்ற இந்த தயிர் மக்ரோனி அனைவருக்கும் ஏற்றது. புத்துணர்ச்சி தருவது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 8 ஏப் 2021