மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ஆட்சியர் அலுவலகம் ஜப்தி?

ஆட்சியர் அலுவலகம் ஜப்தி?

நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஊழியர்கள் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மகாராஜபுரத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சண்முகம் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 75 சென்ட் இடத்தை 1991ஆம் ஆண்டு, அரசு நில ஆர்ஜிதம் செய்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு வழங்கியது. இதில், சண்முகம் மகன் சிவானந்தத்தின் பங்கான 1 ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கு ஒரு சதுர அடி 8 ரூபாய் 10 பைசா எனக் கணக்கிட்டு ரூ. 4,55,332 இழப்பீடு வழங்கப்பட்டது.

அரசு சார்பில் வழங்கப்பட்ட இந்தத் தொகை சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறி, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் சிவானந்தம் 2007ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். அதுபோன்று, சண்முகம், தனது பாகமான 1 ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என 2013ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த இரு வழக்குகளையும் 2018ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதி கோபிநாதன் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடுத் தொகையாக ரூ.39,36,59,337 வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். நீதிமன்றம் இழப்பீடுத் தொகையை வழங்க உத்தரவிட்டும். அதை வழங்காமல் காலதாமதப்படுத்தியதால் சிவானந்தம் மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை 2020ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதி, இழப்பீடுத் தொகையை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவேண்டும். இல்லையென்றால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அசையும் சொத்துகள், வீட்டுவசதி வாரியத்தில் உள்ள அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இழப்பீடு தொகையை வழங்குவதற்கான போதிய கால அவகாசம் கொடுத்தும், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் இழப்பீடுத் தொகையை வழங்காததால், நேற்று(ஏப்ரல் 7) நீதிமன்ற ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய வந்தனர்.

வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர், நீதிமன்ற ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இழப்பீடு தொகை வழங்குவதற்கு இன்னும் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு மனுதாரர் சிவானந்தம் ஒப்பு கொண்டதையடுத்து, ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு நீதிமன்ற ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 8 ஏப் 2021