மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சேமியா பாப்சிகல்

கிச்சன் கீர்த்தனா: சேமியா பாப்சிகல்

நாம் அனைவரும் குச்சி ஐஸ் என்று அழைக்கும் இதை, அமெரிக்கர்கள் ‘பாப்சிகல்’, என்கிறார்கள். பிரிட்டிஷார் ‘ஐஸ் லாலி’ என்கிறார்கள். ஆஸ்திரேலியர்கள் ‘ஐஸி பாலே’ என்கிறார்கள். பிலிப்பைன்ஸ் மக்கள் ‘ஐஸ் டிராப்’ என்கிறார்கள். இந்தியச் சந்தையில் இதன் பெயர் ‘ஐஸ் பாப்'. இப்போது பாப்சிகல்.

1905ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவனான பிராங்க் எபெர்சன், எலுமிச்சையும் சோடாவும் கலந்து ஸ்பூனை எடுக்காமல் அதை அப்படியே உறைபனிக் கலவைக்கு வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். மறுநாள் காலையில் அது உறைந்த நிலையில் சுவைக்கக் கிடைத்தது. ஸ்பூனுடன் அதை அப்படியே எடுத்து சுவைத்தபோதுதான் அவனுக்கு குச்சி ஐஸ் தயாரிப்பதற்கான யோசனை கிடைத்தது என்கிறார்கள் உணவு வரலாற்றாசிரியர்கள். ஆனாலும், தள்ளுவண்டிகளில் கிடைக்கும் சேமியா ஐஸ் குச்சிக்கு இணையுண்டா... நீங்களும் உங்கள் வீட்டிலேயே இந்த சேமியா பாப்சில் செய்து மகிழலாம்.

என்ன தேவை?

காய்ச்சாத பால் - அரை லிட்டர்

சர்க்கரை - 60 கிராம்

சேமியா - 50 கிராம்

ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை

பால் பவுடர் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பால் பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்துக் கரைக்கவும். வெறும் வாணலியில் சேமியாவைச் சேர்த்துக் கருகாமல் வறுக்கவும். அதனுடன் மீதமுள்ள பால் சேர்த்து வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய்த்தூள், பால் பவுடர் கலவை சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் இதை பாப்சிகல் மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

பால் பவுடருக்குப் பதிலாக கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.

நேற்றைய ஸ்பெஷல்: சாக்லேட் குல்ஃபி

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 8 ஏப் 2021