மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

மும்பையைத் தொடர்ந்து டெல்லியிலும் இரவு ஊரடங்கு!

மும்பையைத் தொடர்ந்து டெல்லியிலும் இரவு ஊரடங்கு!

மும்பையைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து பரவி வருகிறது. தினந்தோறும் இந்தக் கொடிய தொற்று நோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக மராட்டியம், பஞ்சாப், கர்நாடகம், தமிழகம், டெல்லி உட்பட எட்டு மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக மராட்டியத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மாநில அரசுகள் யோசித்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று (ஏப்ரல் 6) 3,000-க்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கொரோனா தடுப்பூசி மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களின் தலைநகரங்களிலும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

-ராஜ்

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

புதன் 7 ஏப் 2021