இன்றைய நிலவரம்: ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கியது!


தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 7) ஒரேநாளில் 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 9,11,110 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 15 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 17 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,821 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்ட 1,824 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 8,70,546 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,01,73,626 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,535 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
27,743 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று மட்டும் 1459 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்தது.
இன்று கோவையில் 332 பேருக்கும், செங்கல்பட்டில் 390 பேருக்கும், திருவள்ளூரில் 208 பேருக்கும், தஞ்சையில் 108 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வினிதா