மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

சாத்தான்குளம்: இடைக்கால தடை விதிக்க முடியாது!

சாத்தான்குளம்: இடைக்கால தடை விதிக்க முடியாது!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள எஸ்ஐ ரகுகணேஷ், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், "எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு தொடர்பான சிபிஐ ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.

இதுவரை எனக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான் வழக்கை என்னால் எதிர்கொள்ள முடியும். சிபிஐ ஆவணங்களை வழங்கும் வரை விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை எனக்கு தர உத்தரவிட வேண்டும் என்றும்” கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 7) உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணை செய்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதே வழக்கில் சிறையில் இருக்கும் தாமஸ் பிரான்சிஸ், தனது சகோதரருக்கு திருமணம் நடப்பதால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜாமீன் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை சகோதரர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தாமஸ் பிரான்சிஸ்க்கு ஜனவரி 10ஆம் தேதி காலை 11 மணி முதல், ஜனவரி 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 7 ஏப் 2021