மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்!

வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்!

சத்தீஸ்கரில் தங்கள் பிடியில் இருக்கும் பாதுகாப்பு படைவீரரின் புகைப்படத்தை நக்சலைட்டுகள் வெளியிட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில், பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 31 பேர் காயமடைந்தனர். ஒரு வீரர் காணாமல் போயிருந்தார். அவரை தேடும் பணி நடைபெற்று இருந்தது.

இந்நிலையில் இன்று(ஏப்ரல் 7) நக்சலைட்டுகள் அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், பீஜாப்பூர் தாக்குதலில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் காயமடைந்தனர். ஒரு வீரர் எங்களது பிடியில் உள்ளார். இந்த சம்பவத்தில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசுடன் பேசுவதற்கு தயாராக உள்ளோம். இதற்காக மத்தியஸ்தர்களை அரசு நியமிக்க வேண்டும். எங்கள் பிடியில் உள்ள வீரரை விடுவிக்க நாங்கள் தயார். அரசாங்கம் மத்தியஸ்தர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை கைப்பற்றப்பட்ட வீரர் தங்கள் பிடியில் பாதுகாப்பாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினரும் , பாதுகாப்புப் படையினரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்சலைட்டுகள் பிடியில் இருக்கும் வீரர் ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் என்பது தெரிய வந்துள்ளது.

ஒரு வீரரை பிணைக் கைதியாக வைத்திருப்பதாகக் கூறி நக்சலைட்டுகள் வெளியிட்ட அறிக்கையின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அம்மாவட்ட காவல் ஆய்வாளர் பி.சுந்தர்ராஜ் கூறினார்.

இதுகுறித்து மத்திய அரசும் இந்திய ரிசர்வ் படை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு, தங்கள் பிடியில் இருக்கும் மன்ஹாஸின் புகைப்படத்தை நக்சலைட்டுகள் வெளியிட்டனர். அந்தப் புகைப்படத்தில் மன்ஹாஸ் ஒரு தற்காலிக முகாமுக்குள் ஒரு காட்டில் அமர்ந்திருக்கிறார். அதில் அவருக்கு எந்த காயமும் இருப்பதாக தெரியவில்லை.

மன்ஹாஸின் மனைவி மீனு தனது கணவரை திரும்பப் பெற்று தருமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். பாகிஸ்தானிலிருந்து அபிநந்தனை மீட்டு வந்ததைபோல, எனது கணவரையும் பாதுகாப்பாக மீட்கும்படி மோடியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றார்.

சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 7 ஏப் 2021