மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

தீயணைப்புத்துறையினருக்கு விடுமுறை ரத்து!

தீயணைப்புத்துறையினருக்கு விடுமுறை ரத்து!

கோடைக்காலம் முடியும் வரை தீயணைப்புத்துறை வீரர்கள் விடுமுறையில் செல்லக் கூடாது என்று தீயணைப்புத்துறை தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தீயணைப்புத்துறையின் சார்பில் கருத்தரங்குக் கூட்டம் நடந்தது. இதற்கு தென்மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குநர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளில் மின் பகிர்மானம் தொடர்பான வழிமுறைகள், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

எனவே, இதுபோன்ற விபத்துகள் தமிழகத்தில் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத்துறை சார்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்புத்துறையின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். தீ தடுப்பு உபகரணங்களை வைத்திருப்பதையும், அதை அனைத்து மருத்துவப் பணியாளர்களும் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்றவர்,

தொடர்ந்து, “தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தீ தடுப்பு உபகரணங்கள் தென்மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் தயார் நிலையில் உள்ளன. கோடைக்காலம் முடியும் வரை தீயணைப்புத்துறை வீரர்கள் விடுமுறையில் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 7 ஏப் 2021