மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

குறுகில கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்

இருமாதங்களுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வது குறித்த நிதிக் கொள்கை கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டம் இன்று(ஏப்ரல் 7) டெல்லியில் நடைபெற்றது.

இதையடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், “ ரெப்போ வட்டி விகிதம் 4% என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 % என்ற அளவிலேயே தொடரும். வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2021-22 காலகட்டத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10.5 விழுக்காடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதம் அளவில் இருக்கும். நிதிப் பற்றாக்குறையின் அதிகபட்ச அளவு 6 சதவீதம்தான் இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவலில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பற்றாக்குறை 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்கம் சராசரியாக 5 சதவீதமாக உள்ளது. இது 2021-22 நிதியாண்டின் முதல் பாதியில் 5.2 சதவிகிதமாகவும், மூன்றாம் காலாண்டில் 4.4 சதவிகிதமாகவும், நான்காம் காலாண்டில் 5.1 சதவிகிதமாகவும் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 7 ஏப் 2021