மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

தேர்தலில் பலருக்கும் சர்க்கார் பட நிலைமைதான்!

தேர்தலில் பலருக்கும் சர்க்கார் பட நிலைமைதான்!

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் 'சர்க்கார்' படப்பாணியில் '49 பி' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் அபுதாபியில் பொறியாளராக உள்ளார். இவர் தனது வாக்கினை செலுத்துவதற்காக, அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று தனது வாக்கினை செலுத்த திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகி இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், தான் இன்னும் வாக்களிக்கவில்லை என கூறியுள்ளார். இதுகுறித்த தேர்தல் அலுவலர்கள் விசாரணையில், ரமேஷ் பெயரிலான போலியான ஆதார் அட்டையைக் காட்டி மர்மநபர் வாக்கினை செலுத்தியிருப்பது தெரியவந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் 1961 தேர்தல் நடத்தை விதிகளின் பிரிவு 49 பி இன் கீழ் டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தனது ஆவணங்களை காண்பித்து, தனது வாக்கை வாக்குச்சீட்டு மூலமாக செலுத்தினார் ரமேஷ் .

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் நேற்று மற்றவர்களின் வாக்குகளை போலியான ஆதாரத்தை காட்டி மர்மநபர்கள் வாக்களித்ததையடுத்து, வாக்குக்கு சொந்தகாரர்கள் சர்க்கார் பட பாணியில்தான் வாக்களிக்க முடிந்தது.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் நிவாசன். வங்கி ஊழியரான இவரும் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் டெண்டர் முறையில் வாக்களித்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் தஸ்தகீர் என்ற பெண்மணியும் 49 பி டெண்டர் முறையில் வாக்களித்தார்.

டெண்டர் முறையில் அளிக்கப்படும் இந்த வாக்குகள் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையில் சிறிய அளவு வித்தியாசம் வரும் பட்சத்தில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

புதன் 7 ஏப் 2021