மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

கொரோனா: அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியம்!

கொரோனா: அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியம்!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அடுத்து வரும் நான்கு வாரங்களும் மிக முக்கியமானவை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 630 பேர் பலியாகினர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நாளை பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதுகுறித்து நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே. பால் கூறுகையில், ”நாடு முழுவதும் கொரோனா பரவல் மோசமான நிலையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகமாக காணப்பட்டாலும், இந்தியா முழுவதும் தொற்று அதிகரித்து வருவதை மறுக்க முடியாது. சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கையைப் போல் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தற்போது அதிகளவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையை தடுப்பதில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்று. அடுத்து வரும் நான்கு வாரங்களும் மிக நெருக்கடியானவை, அந்த சூழலை நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும்.

கொரோனா பரிசோதனைகளில் சுணக்கம், நோய் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கத் தவறியது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாததே கொரோனா பரவல் அதிகரிக்க காரணமாகும்” என கூறினார்.

இதையடுத்து பேசிய மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. 10 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகளவில் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், மகாராஷ்டிராவில் 7 மாவட்டங்கள், கர்நாடகாவில் ஒன்று, டெல்லியில் ஒரு மாவட்டம் ஆகியவை ஆகும். மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு, பல்வேறு நிபுணர்களை கொண்ட உயர்மட்ட மருத்துவ குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தயக்கம் காட்டாமல் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருவதால் அது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது தடுப்பூசி யாருக்கு மிக அவசியமானது என்றும் உயிர் பலியை தடுக்கும் நோக்கில்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

புதன் 7 ஏப் 2021