மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

தமிழக - கேரளத் தேர்தலால் களை இழந்த குமரி!

தமிழக - கேரளத் தேர்தலால் களை இழந்த குமரி!

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். காலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிப்பதற்கே அவ்வளவு கூட்டம் வரும்.

மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு படகு மூலம் சென்று பார்த்து, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி மகிழ்வார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது குமரி. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவுக்கு வழிவகுக்கும் வகையில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் யாரும் இங்கு இருக்கக்கூடாது. அவரவர் தங்களது தொகுதியில் தான் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இதனால் குமரி மாவட்டத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் தங்களது ஊர்களுக்குச் சென்று விட்டனர். அதேபோல் கன்னியாகுமரியில் இருந்த வெளிமாவட்டத்தினரும் வெளியேறினர். அத்துடன் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வரவில்லை.

இதனால் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக காலையில் சூரிய உதயத்தை காணவும், கடலில் புனித நீராடும் பகுதியிலும் ஏராளமானோர் கூடுவார்கள். ஆனால் நேற்று முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இன்றும் அதே நிலை தான் காணப்பட்டது.

-சக்தி பரமசிவன்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 7 ஏப் 2021