மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூதாட்டி!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூதாட்டி!

மதுரையில் தன்னுடைய உடல்நலக்குறைவை கூட கருத்தில் கொள்ளாமல் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்து அசத்தியுள்ளார் 86 வயதான மூதாட்டி.

தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையான வாக்களிப்பை கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதில் முதியோர்கள் மிக தெளிவாக இருக்கின்றனர் என்பதை இன்று சில சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.

மதுரை ஆரப்பாளையம் டி.டி சாலையில் வசித்து வருபவர் இராஜமாணியம்மாள். 86 வயதான இவர் சமீப காலமாக உடல் நலக் குறைவு காரணமாக வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தனது ஜனநாயக கடமையை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தனது குடும்பத்தார் உதவியுடன் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதன்மூலம் வாக்குச் சாவடி சென்றார் மூதாட்டி. அங்குத் தள்ளுவண்டி உதவியோடு வாக்குச்சாவடிக்குள் நுழைந்து இராஜமாணியம்மாள் தனது வாக்கினைப் பதிவு செய்தார்

தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் வந்து வாக்களித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதுபோன்று, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவைபாளையம் பகுதியில் 95 வயதான மூதாட்டி வீல் சேரில் அமர்ந்து வந்து ஆர்வமுடன் தனது ஜனநாயக கடைமையை செலுத்தினார்..

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 6 ஏப் 2021