மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

பெண்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள்!

பெண்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள்!

திருப்பத்தூர் ஆம்பூரில் காலை முதலே ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க பலரும் ஆர்வமாக வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஒன்றான ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள ஜாக்கிரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை முதலே ஆண்களைவிட அதிகளவு இஸ்லாமிய பெண்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுபோன்று, விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று காலை முதலே ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர்.

மற்றொரு புறம், பெண் வாக்களர்களை கவரும் வகையில் தமிழகத்தின் பல இடங்களில் பெண்களுக்கான பிரத்யேகமாக பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் பிங்க் நிறத்திலான 4 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 4 வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள், சுகாதாரப்பணியாளர், அனைவரும் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோன்று, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் பெண்களுக்கென பிரத்யேகமாக வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, சுவர்களில் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

விருதுநகர் அருகே ஆமத்தூரில் இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்ட மகளிர் வாக்குச்சாவடி மையத்தில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர்.

வினிதா

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

செவ்வாய் 6 ஏப் 2021