மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

படகில் பயணித்து வந்து வாக்களித்த பழங்குடியினர்!

படகில் பயணித்து வந்து வாக்களித்த பழங்குடியினர்!

ஜனநாயக கடமையாற்ற படகில் பயணித்து அரை கி.மீ நடந்து ஓட்டு போட்டு சென்றனர் குமரிமாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை மலை பகுதியில் விளமலை, முடவன் பெற்றா, தச்சமலை, புன்ன முட்டதேரி, களப்பாறா, நடனம்பொற்றா, மறாமலை, தோட்டமலை பகுதிகள் உள்ளன. இங்கு 800க்கும் மேற்பட்ட பழங்குடியின வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கான வாக்கு சாவடி பேச்சிப்பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உண்டு உறைவிட மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.

இவர்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அணையை கடந்து வர வேண்டும். இதற்காக அவர்கள் படகில் 15 நிமிடம் பயணம் செய்து பேச்சிப்பாறை வாக்கு சாவடிக்கு சென்றனர். படகுத்துறைக்கும், வாக்குசாவடிக்கும் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

ஜனநாயக கடமையாற்ற இவர்கள் படகில் பயணம் செய்தும், நடந்தும் வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் வசித்த பகுதிகளிலேயே வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது பேச்சிப்பாறையில் அமைக்கப்பட்டதால் படகில் வந்து வாக்களித்து செல்லவேண்டியிருந்தது என்றனர்.இருந்தாலும் வாக்களித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தனர்.

வாக்குக்கு பணம் தரவில்லை

திருச்சியை அடுத்த துவாக்குடி அருகே உள்ளது தேவராயனேரி நரிக்குறவர் காலனியில் நரிக்குறவர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊசி, பாசி, மணி மாலை விற்பது உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக அங்கு உள்ள சமுதாயக் கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச் சாவடியில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 893. ஆண் வாக்காளர்கள் 447. பெண் வாக்காளர்கள் 446. காலை 11 மணி நிலவரப்படி இங்கு 122 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைத்தொடர்ந்து, அங்குள்ள ஆலமரத்தடியில் நரிக்குறவர் இன பெண் வாக்காளர்கள் ஏராளமானவர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் நாங்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டோம். எங்களுக்கு ஓட்டுக்குப் பணம் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கொடுப்பதற்காக அரசியல் கட்சி வேட்பாளர்கள் வழங்கிய பணத்தை சிலர் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாகவும், எங்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. ஆதலால் நாங்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டோம் எனவும் கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 6 ஏப் 2021