மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முறையான ஏற்பாடு இருக்கிறதா?

மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முறையான ஏற்பாடு இருக்கிறதா?

சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக வசதி இல்லாத காரணத்தினால், அந்த வாக்காளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிசெய்வதற்கான அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதுமட்டுமில்லாமல், ஒரு வாக்கு கூட விடுபட்டு போய்விடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகள் செய்ததாகவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்துவித ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தின் சில இடங்களில் வீல் சேர் இல்லாத காரணத்தால் வாக்காளர்கள் கஷ்டப்பட்டுள்ளனர்.

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி கல்யாணபுரம் சென்னை நடுநிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இன்று இரண்டு கால்களையும் இழந்த சுமதி என்ற பாட்டி தனது கணவர் ராமசாமியோடு வாக்களிப்பதற்காக மீன்பாடி வண்டியில் வந்தார். அவரை அழைத்து செல்ல வீல் சேர் கேட்டபோது, அங்கே இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ராமசாமி தனது மனைவியை முதுகில் சுமந்து சென்று வாக்களிக்க செய்தார்.

அதுபோன்று, நெல்லை மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி பேரூராட்சியில் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் திருஇருதய ஆரம்பப்பள்ளியில் 8 வாக்குச்சாவடிகள் உள்ளன. இன்று மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் 234வது வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வீல் சேர் இல்லாத காரணத்தினால் அவர் பள்ளியின் உயரமான படிகளில் தவழ்ந்தவாறு வாக்குச் சாவடிக்கு வந்தார். அங்கு ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், பெண்களுக்கு தனியாக வாக்குச்சாவடி உள்ளது என அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து அந்த மாற்றுத்திறனாளி பெண் மீண்டும் பல படிகளை தாண்டி கிட்டதட்ட 200 மீட்டர் தவழ்ந்தே சென்று வாக்களித்துள்ளார்.

முறையான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால், இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த முதியோர்கள் பலரும் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். பள்ளியின் வாயில் உயரமாக இருந்ததால் அதில் ஏறவும், இறங்கவும் முடியாமல் வயது முதிர்ந்த பாட்டிமார்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.

இரு வாக்குச்சாவடிகளிலும் வீல் சேர் வசதி இல்லாதது குறித்து கேட்டபோது, அதிகாரிகள் சரியான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

செவ்வாய் 6 ஏப் 2021