மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து 5 பேர் காயம்!

வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து 5 பேர் காயம்!

ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியில் வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டகண்டிலான் கிராமத்தில் 626வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு நாளான இன்று கண்டிலான் கிராமத்தில்உள்ள சமுதாய கூடத்தில் வாக்குச் சாவடிஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் வந்து வாக்களித்து விட்டு செல்கின்றனர்.

இன்று காலையில் வாக்களிப்பதற்காக தாமோதரன், புவனேஸ்வரி, முனியசாமி,பூமி கிருஷ்ணன், முருகன் உள்ளிட்ட 5 பேர்சமுதாயக் கூடத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது, மேற்கூரை இடிந்து விழுந்ததில்5 பேரும் காயமடைந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம்முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்குகொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதுபோன்று தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை தனியார் பள்ளியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இங்கு தனது வாக்கை பதிவு செய்த அர்ஜூனன் என்ற முதியவர், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

செவ்வாய் 6 ஏப் 2021