மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

’சர்க்கார்’ பாணியில் வாக்களித்த வாக்காளர்!

’சர்க்கார்’  பாணியில் வாக்களித்த வாக்காளர்!

சென்னை பெசன்ட் நகரில் தனது வாக்கை வேறு ஒருவர் செலுத்தியதால், விஜய் நடித்த சர்க்கார் பட பாணியில் டெண்டர் முறையில் வாக்களித்துள்ளார் 70 வயதான கிருஷ்ணன்.

தமிழகத்தில் நடைபெற்று வருகிற சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வழக்கமாக நடக்கிற பிரச்சினைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலையில் தன்னுடைய வாக்கை செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் அந்த பெயரில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன், என்னுடைய வாக்கை வேறு ஒருவர் எப்படி செலுத்த முடியும், "நான் வாக்களிக்க வேண்டும்" என்று உறுதியாக இருந்து இருக்கிறார். இதையடுத்து ஆலோசனை செய்த வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், டெண்டர் முறையில் வாக்களிக்க அவருக்கு அனுமதி அளித்ததையடுத்து, கிருஷ்ணன் வாக்களித்தார்.

இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில்,” இத்தனை வருட அனுபவத்தில் என் வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்வது இதுவே முதல்முறை. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு இடையில் சிறிய அளவு வித்தியாசம் வரும் பட்சத்தில் மட்டுமே என்னுடைய வாக்கை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்று அதிகாரிகள் கூறினார்கள். அப்படி வித்தியாசம் வரவில்லை என்றால் என்னுடைய வாக்கை எண்ண மாட்டார்களாம். இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது” என கூறினார்.

இதுபோன்று, சென்னை, தண்டையார்பேட்டை, சேனி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பக்ரைன் நாட்டில் வசித்து வருகிறார். இவர், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தண்டையார்பேட்டை, தாண்டவராயன் தெருவில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி 164ஆவது வாக்குச்சாவடியில் தனது வாக்கை இவர் செலுத்த செல்லும்போது, அவரது வாக்கு ஏற்கனவே தபால் வாக்கு மூலம் பதிவாகி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 6 ஏப் 2021