மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

சூரியனுக்கு போட்டால் இலையில் லைட் எரியுது!

சூரியனுக்கு போட்டால் இலையில் லைட் எரியுது!

தேர்தல் நடைபெற்று வரும் சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கே வாக்கு விழுவதாக புகார்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற வேளையில், ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிற வேளையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் வகையில் எந்த பட்டனை அழுத்தினாலும் அதிமுக சின்னத்துக்கே வாக்கு விழுவதாக புகார் வந்துள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் தொகுதியான ராயபுரத்திலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே 52 வாக்குகள் பதிவானதாகக் காட்டியது அதிர்ச்சியளித்தது. இதனை கண்டுபிடித்த அரசியல் கட்சியினர் புகார் அளித்தனர். அதன்பிறகு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆவடி, திருப்பூர் அவிநாசி தொகுதிகளில் திமுகவிற்கு வாக்கு செலுத்த அந்த பட்டனை அழுத்தினால் அதிமுக சின்னமான இரட்டை இலையில் வாக்கு விழுந்து, விவிபேட் இயந்திரத்தில் இரட்டை இலை என காட்டியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் வாக்காளர்கள் புகார் அளித்தனர்.

அதனால் புகார் வந்த அவினாசி தொகுதிக்கு உள்பட்ட கனியாம்பூன்டியில் 312ஆவது வாக்குச்சாவடியிலும், ஆவடி விவேகானந்தா பள்ளியில் உள்ள 123வது வாக்குச்சாவடியிலும் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரைத் தொடர்ந்து, அவிநாசி வாக்குச்சாவடியில் சோதனை செய்ததில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்வதாகவும், வழக்கம் போல் வாக்குப்பதிவு தொடர்வதாகவும் ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

வினிதா

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

செவ்வாய் 6 ஏப் 2021