மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: வாழைத்தண்டு பாயசம்!

ரிலாக்ஸ் டைம்: வாழைத்தண்டு பாயசம்!

வெயிலுக்கேற்ற உணவுகளில் ஒன்று வாழைத்தண்டு. வழக்கமாக வாழைத்தண்டில் சூப், பொரியல், கூட்டு, ஜூஸ் செய்து சாப்பிடுவோம். இன்று வாழைத்தண்டு பாயசம் செய்து அசத்துவோம்.

எப்படிச் செய்வது?

நார் நீக்கிய ஒரு கப் வாழைத்தண்டை அரைத்துக்கொள்ளவும். 50 கிராம் முந்திரி, திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுக்கவும். 100 கிராம் நெய்யை வாணலியில் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து, 100 கிராம் சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் சேர்த்துக் கிளறவும். பிறகு, அரை கப் பால் விட்டுக்கிளறி கொதித்து வரும்போது, ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து... வறுத்த முந்திரி, திராட்சையையும் சேர்த்து, ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

சிறப்பு

வாழைத்தண்டுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. கோடைக்காலத்தில் ஏற்படும் நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

செவ்வாய் 6 ஏப் 2021