மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

உயர்த்தப்பட்ட நீதிமன்ற கட்டணத்தை மறுஆய்வு செய்ய உத்தரவு!

உயர்த்தப்பட்ட நீதிமன்ற கட்டணத்தை மறுஆய்வு செய்ய உத்தரவு!

வழக்கு தொடர்வதற்கான நீதிமன்ற கட்டணத்தை உயர்த்தியதை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்த கே.வசந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ” கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றங்களில் அரசுக்கு எதிராக தொடரப்படும் ரிட் வழக்குகளை தாக்கல் செய்ய 200 ரூபாய் ஆக இருந்த நீதிமன்ற கட்டணத்தை 1000 ஆக தமிழக அரசு உயர்த்தியது.

ரிட் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்வதற்கான நீதிமன்ற கட்டணத்தை ரூபாய் 200லிருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதிகபட்சமாக ரூ.500 மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் ரிட் வழக்கு தொடர ரூ.200 மட்டுமே கட்டணமாக உள்ளது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் நீதிமன்றக்கட்டணம் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் 2017ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு நீதிமன்ற கட்டணம் மற்றும் வழக்குகள் மதிப்பீட்டு சட்ட திருத்தத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். முன்பு இருந்த கட்டணத்தையே வசூலிக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று(ஏப்ரல் 5) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில், இதற்காக குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேலே கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான கட்டணத்தை ரூ.1000, மற்றும் ரூ.2000 ஆக உயர்த்தியுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டு இருப்பதால், இதில் எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. இருப்பினும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

செவ்வாய் 6 ஏப் 2021